< Back
மாநில செய்திகள்
கண் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கண் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
5 Feb 2023 12:24 AM IST

கீழக்கரை அருகே கண் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கீழக்கரை,

கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் ஊராட்சி, கிழக்கு மங்களேஸ்வரி நகரில் இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட கண் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு சிற்று அம்மன், லாடசாமி சுவாமி, கருப்பணசுவாமி, நந்தீஸ்வரர் ஆகிய தெய்வங்கள் உள்ளன. விழாவில் மங்களஇசை, 2-ம் கால யாகசாலை பூஜை, மண்டல பூஜை, விக்னேஸ்வர பூஜை, அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. விழா கமிட்டி சார்பாக பா.ஜனதா தொழிலாளர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் முருக சக்தி வரவேற்றார்.இந்த விழாவுக்கு ராமநாதபுரம் திவான் பழனிவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாயாகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி பாக்கியநாதன் முன்னிலையில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் சக்தி, பா.ஜ.க. மாவட்ட தலைவர் கதிரவன், செயலாளர் பவர் நாகேந்திரன் மற்றும் கோவில் நிர்வாகிகள் மாடசாமி நாடார், லாடசாமி நாடார், நாகராஜ் நாடார், சக்தி நாடார், மற்றும் கமிட்டியாளர் இ.எஸ்.எம்.பாலமுருகன், சக்திகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்