< Back
மாநில செய்திகள்
விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
5 Jun 2022 5:53 PM GMT

காரசூரம்பட்டி, நாச்சிகுறிச்சி, சடையம்பட்டியில் உள்ள விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆவூர்:

சுந்தர கணபதி கோவில்

விராலிமலை அருகே நாச்சிகுறிச்சியில் சுந்தர கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை காலை ஊர் முக்கியஸ்தர்கள் காவிரியிலிருந்து கோவிலுக்கு புனிதநீர் எடுத்து வந்தனர். தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலை கூடத்தில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் உள்ளிட்ட முதல்கால யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து திருமுறை பாராயணம், கோபூஜை உள்ளிட்ட 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

இதையடுத்து காலை 10 மணியளவில் யாகசாலை கூடத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர்குடங்களை சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தலையில் சுமந்தவாறு மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. மற்றும் நாச்சிகுறிச்சி, திருநல்லூர், ஆலங்குளம், சூரியூர், விராலிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நாச்சிகுறிச்சி கிராம மக்கள் செய்திருந்தனர்.

சித்தி விநாயகர் கோவில்

அன்னவாசல் அருகே காரசூரம்பட்டியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சித்த விநாயகருக்கு மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் செய்காரசூரம்பட்டி, நாச்சிகுறிச்சி, சடையம்பட்டியில் உள்ள விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.திருந்தனர்.

சித்தி விநாயகர் கோவில்

காரையூர் அருகே சடையம்பட்டியில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றன. இதையொட்டி யாக சாலை பூைஜகள் நடைபெற்றது. இதைதொடர்ந்து சிவாச்சாரியார்கள் சித்தி விநாயகர் கோவில் மூலஸ்தான கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சடையம்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் ஜங்கமர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்