< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
பாலமுருகன் கோவிலில் 108 சிவலிங்கத்திற்கு கும்பாபிஷேகம்
|19 Sept 2023 2:05 AM IST
பாலமுருகன் கோவிலில் 108 சிவலிங்கத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.
லால்குடி:
லால்குடி அருகே எல்.அபிஷேகபுரத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில்கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் புதிதாக 108 சிவலிங்கம் கொண்ட சன்னதி அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு, யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் பாலமுருகன் சன்னதி மற்றும் 108 சிவலிங்கத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.