< Back
மாநில செய்திகள்
ஆலந்தூரில் வேம்புலி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சென்னை
மாநில செய்திகள்

ஆலந்தூரில் வேம்புலி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
29 Jun 2023 3:44 PM IST

ஆலந்தூரில் வேம்புலி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சென்னையை அடுத்த ஆலந்தூரில் உள்ள பழமையான வேம்புலி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், கோ பூஜை, 4 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாக சாலையில் இருந்து புனிதநீர் கலசம் எடுத்து செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கும், பின்னர் மூலவர் வேம்புலி அம்மன் மற்றும் செல்வ விநாயகர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

இதில் தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்