< Back
மாநில செய்திகள்
திருவள்ளூரில் தீர்த்தீஸ்வரர் சாமி கோவில் கும்பாபிஷேகம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூரில் தீர்த்தீஸ்வரர் சாமி கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
2 Feb 2023 11:59 AM GMT

திருவள்ளூரில் தீர்த்தீஸ்வரர் சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீதீர்த்தீஸ்வரர் சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை மறுசீரமைத்து, கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டி கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா கடந்த 27-ந் தேதி காலை கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவகிரஹ ஹோமத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து நடைபெற்ற நிலையில் நேன்று காலை 6-ம் கால யாகபூஜையும், மஹா பூர்ணாஹூதி, சண்டேச யாகமும் யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து 9.30 மணிக்கு சிவாச்சாரியார்கள் கலசங்களை கொண்டு சென்று ராஜகோபுரம், மூலவர் விமான கோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

விழாவை காண கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ வி.ஜி. ராஜேந்திரன், திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் உதய மலர் பொன்.பாண்டியன், துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கோவிலை சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. மாலை 6 மணிக்கு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீதீர்த்தீஸ்வரர் சுவாமி திருக்கல்யாணம், ரிஷப வாகன சேவை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீதீர்த்தீஸ்வரர் கோவில் பரம்பரை தர்மகத்தா ஆர்.ரவி குருக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்