< Back
மாநில செய்திகள்
சேலம் சுகவனேசுவரர் கோவிலில் வருகிற 7-ந் தேதி கும்பாபிஷேகம்
சேலம்
மாநில செய்திகள்

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் வருகிற 7-ந் தேதி கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
17 Aug 2022 7:56 PM GMT

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று வருகிற 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று வருகிற 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

திருப்பணிகள்

சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவில் உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இந்த ்கோவிலில் சுகவனேசுவரர், சொர்ணாம்பிகை அம்மனுடன் அருள்பாலிக்கிறார். கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு பாலாயம் செய்யப்பட்டது.

தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. தற்போது பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளதால் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7-ந் தேதி கும்பாபிஷேகம்

இதை முன்னிட்டு வருகிற 1-ந் தேதி காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, குரு வந்தனம் உடன் கும்பாபிஷேக பணிகள் தொடங்குகிறது. 4-ந் தேதி முதற்கால யாக பூஜையும், 5-ந் தேதி காலையில் 2-ம் கால யாக பூஜையும், மாலையில் 3-ம் கால யாக பூஜையும் நடக்கிறது.

அடுத்த மாதம் 7-ந் தேதி காலை 10.50 மணிக்கு அனைத்து விமானங்கள் மற்றும் அனைத்து ராஜகோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 11.15 மணிக்கு சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதணை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகம், தீபாரானை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. அன்றைய தினம் மாலை 4 மணிக்கு சொர்ணாம்பிகை சமேத சுகவனேசுவரருக்கு திருக்கல்யாணம், 5 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்