< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
சாய்நாதர் குடிலில் கும்பாபிஷேகம்
|4 March 2023 1:55 AM IST
திருமங்கலம் ஆலம்பட்டி அருகே சாய்நாதர் குடிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருமங்கலம்,
திருமங்கலம் ஆலம்பட்டி அருகில் செட்டி பிள்ளையார்நத்தம் பகுதியில் உள்ள ஞானயோகி ரவிதாத்தா குடிலில் புதிதாக சாய்நாதர் குடில் கட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சாய்நாதர் குடிலில் மகா கும்பாபிஷேக விழா ஞானயோகி ரவிதாத்தா, குருமாதா சுபா அம்மா ஆகியோர் தலைமையிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் வெங்கடேச அய்யங்கார் மேற்பார்வையிலும் நடந்தது. விமான கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை ஞானயோகி ரவிதாத்தா ஜெயந்தி விழா நடைபெறுகிறது.