< Back
மாநில செய்திகள்
நிலக்கோட்டை அருகே முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

நிலக்கோட்டை அருகே முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
9 Sep 2022 6:41 PM GMT

நிலக்கோட்டை அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

நிலக்கோட்டை அருகே என்.ஊத்துபட்டியில் முத்தாலம்மன், காளி, பகவதி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது.அதையடுத்து கோவில் கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


Related Tags :
மேலும் செய்திகள்