< Back
மாநில செய்திகள்
மங்களவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

மங்களவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
12 Dec 2022 12:15 AM IST

திருவெண்ணெய்நல்லூர் அருகே மங்களவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள மங்களவாழியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் சிறப்பு யாக பூஜை நடந்தது. பின்னர் யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், முருகன் உள்ளிட்ட சாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்