< Back
மாநில செய்திகள்
கூத்தாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கூத்தாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
3 March 2023 6:45 PM GMT

சங்கராபுரம் அருகே கூத்தாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூர் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவிலை புதுப்பிக்கும் பணிகள் நடந்து முடிந்ததையடுத்து கடந்த 28-ந் தேதி சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சிலைகள் கரிவலம், கோபுர கலசத்திற்கு தானியமிடுதல் மற்றும் கோபுர சிலைகள் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் வாஸ்துசாந்தி, பிரவேசபலி, மகா பூர்ணாகுதி, முதல் கால யாக சாலை பூஜை நடந்தது.

கும்பாபிஷேக நாளான நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை, நாடி சந்தானம், 2-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. பின்னர் காலை 9 மணியளவில் யாக சாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணியளவில் கோபுர விமான கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்