< Back
மாநில செய்திகள்
கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
22 Aug 2022 6:02 PM GMT

சூளாங்குறிச்சி கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட சூளாங்குறிச்சி கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து அன்று காலையில் புன்யாஹவாசனம், கணபதி, நவகிரக, லஷ்மிஹோமங்கள், கோபூஜை, மாலையில் வாஸ்து சாந்தி பூஜை முடிந்து முதற்கால யாக பூஜை நடைபெற்றது.

பின்னர் நேற்று காலை 2-வது கால பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனையை தொடர்ந்து காலை 9.15 மணியளவில் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசம் புறப்பட்டு விநாயகர் கோவில் கலசத்துக்கும், 9.45 மணியளவில் கெங்கையம்மன் கோவில் கலசத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அருணகிரி, கதிர் தண்டபாணி, துரைராஜ், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ராஜூ, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் கோமதிசுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் சுசீலாபாண்டுரங்கன் உள்பட கட்சி நிர்வாகிகள், ஊர்முக்கியஸ்தர்கள், சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்