< Back
மாநில செய்திகள்
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கரூர்
மாநில செய்திகள்

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
14 Sept 2022 11:58 PM IST

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

லாலாபேட்டை அருகே புனவாசிப்பட்டியில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் ேகாவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கருப்பத்தூர் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து முதல் கால பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்