< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடக்கம்
|22 Aug 2022 11:41 PM IST
பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்பட்டது.
புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடக்க விழா நடந்தது. இதையொட்டி பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கோவில் திருப்பணிக்குழு நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர், பக்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் திருப்பணிக்கான தங்களது வேலைகளை தொடங்கினர்.