< Back
மாநில செய்திகள்
கைலாய நாதர் கோவில் கும்பாபிேஷகம்-நாளை நடக்கிறது
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கைலாய நாதர் கோவில் கும்பாபிேஷகம்-நாளை நடக்கிறது

தினத்தந்தி
|
6 Jun 2023 12:15 AM IST

கைலாய நாதர் கோவில் கும்பாபிேஷகம் நாளை நடக்கிறது

பரமக்குடி

பரமக்குடி அருகே செவ்வூர் கிராமத்தில் கைலாய நாதர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

கைலாய நாதர் கோவில்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் போகலூர் ஒன்றியம் செவ்வூர் கிராமத்தில் உமா மகேசுவரி உடனாய கைலாய நாதர் கோவில் புதிதாக புனரமைக்கப்பட்டுள்ளது. இது சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் ஆகும். தற்போது இது புதிதாக புனரமைக்கப்பட்டு வர்ணம் தீட்டி, கோபுரங்கள் அமைத்து நாளை(புதன்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. அதையொட்டி நேற்று மாலைபொதுமக்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்து திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, ஐங்கரன் வழிபாடு, திருமகள் வழிபாடு போன்றவை நடந்தது. பின்பு முதல் கால வேள்வி தொடங்கப்பட்டது.

இன்று(செவ்வாய்க்கிழமை) இரண்டாம் கால வேள்வியும், மூன்றாம் கால வேள்வியும் நடைபெறுகிறது. நாளை காலை நான்காம் கால வேள்வி தொடங்கி 6 மணி முதல் 7.15 மணிக்குள் பரிவார தெய்வங்களுக்கும், காலை 10.30 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் உமா மகேஸ்வரி உடனாய கைலாய நாதருக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழா

இந்த கும்பாபிஷேக விழா திருவாரூர் தியாகராஜர் பெருமான் தலைமையிலும் திருவாரூர் சிவத்திரு நடராஜன் சுவாமிகள் முன்னிலையிலும் நடைபெற்று கோபுர கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றப்படுகிறது. பின்பு பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதையொட்டி கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை செவ்வூர் கிராம மக்களும், விழாக் குழுவினரும், செவ்வூர் ஊராட்சி நிர்வாகமும் செய்து வருகிறது.

மேலும் செய்திகள்