< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குமரி: 1,800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம்
|7 Dec 2022 5:36 AM IST
1,800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
குமரி,
கன்னியாகுமரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ஸ்ரீதேவி முத்தாரம்மன் கோவிலில் இருந்து மருந்துவாழ் மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் 51 எண்ணெய் குடங்கள் மலை உச்சிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் சார்பில் 1,800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.