< Back
தமிழக செய்திகள்

கன்னியாகுமரி
தமிழக செய்திகள்
குமரி மலையோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை

29 April 2023 12:45 AM IST
குமரி மலையோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை
குலசேகரம்:
குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் தணிந்து வருகிறது.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை உள்பட அணைப் பகுதிகள், மலையோர பகுதிகள் மற்றும் குலசேகரம், களியல், திருநந்திக்கரை, காக்கச்சல், மணியன்குழி, திற்பரப்பு, சுருளகோடு, ஆற்றூர், மேக்கா மண்டபம் உள்ளிட்ட இடங்களில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது.
மேலும் மண்ணில் ஈரப்பதம் அதிகரிப்பதால் பயிர்கள் கருகிப் போகாமல் செழித்து வருகின்றன. இதனால் வாழை, தென்னை, அன்னாசி, ரப்பர் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே வேளையில் புளி உள்ளிட்ட மரங்கள் பூக்கும் பருவத்தில் மழை பெய்து வருவதால் இப்பயிர்களை நடவு செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.