< Back
மாநில செய்திகள்
கடற்கொள்ளையர் சுட்டதில் குமரி மீனவர் பார்வை பறிபோனது...!
மாநில செய்திகள்

கடற்கொள்ளையர் சுட்டதில் குமரி மீனவர் பார்வை பறிபோனது...!

தினத்தந்தி
|
31 Jan 2023 11:26 AM IST

கடற்கொள்ளையர் சுட்டதில் கன்னியாகுமரி மீனவர் பார்வை பறிபோனது.

குமரி,

சவுதி அரேபியாவில் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர் ராஜேஷ்குமார் என்பவரை கடற்கொள்ளையர் துப்பாக்கியால் சுட்டதில் கண்பார்வை பறிபோனது. கண்பறிபோனதை அடுத்து மீனவர் ராஜேஷ்குமார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சவூதி அரேபியாவில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி சவூதியில் 5,000க்கும் மேற்பட்ட குமரி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மீனவர் மீதான தாக்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குமர மாவட்ட ஆட்சியரிடம் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு மனு அளித்துள்ளது.

சவுதி அரேபியாவில் கன்னியாகுமரி மீனவர் ஒருவர் கடற்கொள்ளையர்களால் சுடப்பட்டு பார்வை பறிபோன சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்