< Back
மாநில செய்திகள்
குமரி: இரு கோயில்களில் அடுத்தடுத்து கொள்ளை - கோயிலுக்குள் ஆயுதங்களுடன் நுழையும் சிசிடிவி காட்சி
மாநில செய்திகள்

குமரி: இரு கோயில்களில் அடுத்தடுத்து கொள்ளை - கோயிலுக்குள் ஆயுதங்களுடன் நுழையும் சிசிடிவி காட்சி

தினத்தந்தி
|
22 May 2022 3:48 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு கோவில்களில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு கோவில்களில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி-கேரள எல்லையில் அமைந்துள்ள மேல்பாலையில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் ஒரு கிராம் எடையுள்ள இரண்டு தாலி சுட்டி திருடப்பட்டு இருந்தது.

அதேபோல பகவதியூர்கோனம் பகுதியில் உள்ள கோவிலிலும் ஒரு கிராம் எடையுள்ள தங்க பொருட்கள் திருடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவிலுக்குள் ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் நுழையும் சிசிடிவி காட்சிகள் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்