< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
வீரமாத்தி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
|11 Nov 2022 12:30 AM IST
வீரமாத்தி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கரூர் மாவட்டம், ஆத்தூர் அருகே பூலாம்பாளையத்தில் வீரமாத்தியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கருப்பண்ண சுவாமி, 7 கன்னிமார் சுவாமிகளும் உள்ளன. இந்தநிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் காவிரிக்கு சென்று புனித தீர்த்தம் எடுத்து கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் வீரமாத்தியம்மன், கருப்பண்ண சுவாமி, 7 கன்னிமார் சுவாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.