குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி, பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
|குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
குலசேகரன்பட்டிணம்,
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தசரா திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தசரா திருவிழாவையொட்டி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,
வேல், சூலாயுதம், வாள் போன்ற கூர்மையான பொருட்களை கோவிலுக்கு கொண்டுவரக்கூடாது என்றும், சாதி ரீதியிலான உடைகள் மற்றும் சாதி சின்னங்களுடன் கூடிய கொடி, தொப்பி மற்றும் ரிப்பன்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவிலுக்கு வேடமிட்டு வரும் பக்தர்கள், காவல்துறை சீருடையில் வேடமிட்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் ஆபாச நடனங்களை நடத்தக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.