< Back
மாநில செய்திகள்
குலசை தசரா திருவிழா: முத்தாரம்மன் இன்று மிகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் பவனி
மாநில செய்திகள்

குலசை தசரா திருவிழா: முத்தாரம்மன் இன்று மிகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் பவனி

தினத்தந்தி
|
1 Oct 2022 8:35 AM IST

குலசை தசரா திருவிழாவின் 6-ம் திருநாளான இன்று முத்தாரம்மன் மிகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் பவனிவந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

உடன்குடி,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருகோவில் தசரா பெருந்திருவிழாவில் 6-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்மவாகனத்தில் மிகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். நேற்று இரவு நடந்த பரதநாட்டிய குழுவினருக்கு கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்

அருகில் பாரத திருமுருகன் திருச்சபை நிறுவனரும் சமைய சொற்பொழிவாளருமான ஏ.வி.பி. மோகனசுந்தரம் உடன் இருந்தார். இன்று முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

கோவிலில் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி உதவிய ஆணையர் சங்கர் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

விரதம் இருந்து வந்த பக்தர்கள் தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கைவசூல் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்