< Back
மாநில செய்திகள்
குளமங்கலம் அய்யனார் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.10½ லட்சம் வசூல்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

குளமங்கலம் அய்யனார் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.10½ லட்சம் வசூல்

தினத்தந்தி
|
31 March 2023 12:37 AM IST

குளமங்கலம் அய்யனார் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.10½ லட்சம் வசூலானது.

கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் பிரமாண்ட குதிரை சிலையுடன் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவிலில் மாசிமகத் திருவிழா கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் பிரமாண்ட குதிரை சிலைக்கு 2 ஆயிரத்து 800 காகிதப்பூ மாலைகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக அணிவித்திருந்தனர். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில் கோவில் உண்டியல்களை அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா, செயல் அலுவலர் முத்துக்குமரன், ஆய்வாளர் புவனேஸ்வரி, கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள், கிராமத்தினர் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன. அதில் ரூ.10 லட்சத்து 53 ஆயிரத்து 211 வசூலாகி இருந்தது.

மேலும் செய்திகள்