< Back
தமிழக செய்திகள்
காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு
மயிலாடுதுறை
தமிழக செய்திகள்

காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு

தினத்தந்தி
|
28 Sept 2022 12:01 AM IST

அரசு ஆஸ்பத்திரிகளில் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் காப்பீட்டுத் திட்டங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். தமிழக முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்ட 5 நோயாளிகளுக்கு பரிசு மற்றும் 5 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். மேலும், சிறப்பாக பணியாற்றிய மருத்துவ காப்பீட்டு தொடர்பு அலுவலர்கள், மருத்துவர்கள், வார்டு மேலாளர்களுக்கு சான்றிழ்களை வழங்கினார். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். குடிமுறை மருத்துவ அலுவலர்கள் செந்தில்குமார், அருண்ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்