< Back
மாநில செய்திகள்
தங்கப்பதக்கம் வென்ற தமிழக அணிக்கு பாராட்டு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தங்கப்பதக்கம் வென்ற தமிழக அணிக்கு பாராட்டு

தினத்தந்தி
|
25 Oct 2023 2:00 AM IST

தென்னிந்திய ரோல்பால் போட்டியில் தமிழக பெண்கள் அணிக்கு தங்கப்பதக்கத்தை வென்றது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் அந்தமான் ஆகிய 7 மாநிலங்கள் பங்கேற்ற 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 4-வது தென்னிந்திய ரோல்பால் போட்டிகள் புதுச்சேரியில் நடந்தது. இதில் கடந்த 14-ந்தேதி கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் அணி வீரர்களும், தமிழக அணியில் இடம் பெற்றனர். இறுதிப்போட்டியில் மாணவிகள் பிரிவில் தமிழக அணியும், கேரள அணியும் மோதின. இதில் தமிழக அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றது. மாணவர்கள் பிரிவில் கேரள அணியும், தமிழக அணியும் மோதியது. அதில் 2-வது இடத்ைத பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றது.

தமிழக அணியில் இடம் பெற்ற வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் நேற்று மாலை சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் வீரர்கள், வீராங்கனைகளுக்கு மாஸ்டர் பிரேம்நாத், பயிற்சியாளர்கள் தங்கலட்சுமி, கிருஷ்ணகுமார், பெற்றோர்கள், பொதுமக்கள் சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்