< Back
தமிழக செய்திகள்

வேலூர்
தமிழக செய்திகள்
காட்பாடி போலீசாருக்கு, சூப்பிரண்டு பாராட்டு

20 April 2023 8:40 PM IST
கஞ்சா கடத்தி வந்தவரை கைது செய்த காட்பாடி போலீசாருக்கு, சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
காட்பாடி இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் தமிழக எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர பஸ்சில் ஏறி சோதனை செய்தனர். இந்த சோதனையில் பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த காவேரிப்பாக்கத்தை சேர்ந்த செல்வம் (வயது 24) என்பவரை கைது செய்தனர். அவர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை பிடித்த காட்பாடி போலீசாரை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், தனது அலுவலகத்திற்கு நேற்று வரவழைத்து அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.