விருதுநகர்
பந்தல்குடி கலைமகள் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
|விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்ற பந்தல்குடி கலைமகள் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை,
தென்னிந்திய விளையாட்டு மற்றும் கலாசார அறக்கட்டளை சார்பாக கோவில்பட்டி சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சிலம்பம் கராத்தே, ஸ்கேட்டிங், வில்வித்தை, குத்துச்சண்டை, மற்றும் நடனப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பந்தல்குடி கலைமகள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் 54 பேர் கலந்து கொண்டனர். அதில் 18 பேர் தங்கப் பதக்கமும், 18 பேர் வெள்ளி பதக்கமும், 18 பேர் வெண்கல பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர். ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை கலைமகள் வித்யாலயா பள்ளி பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளி தாளாளர் பெருமாள், நிர்வாகி பஞ்சாமிர்தம்பெருமாள், மேலாளர் மாரிக்கண்ணு, ஆலோசகர் செல்வராஜ், முதல்வர் ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர். பயிற்சி அளித்த சிலம்பம் பயிற்றுநர் செந்தில் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ராஜபாண்டி ஆகியோரையும் பாராட்டினர்.