தேனி
மாணவர்களுக்கு பாராட்டு
|சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் வருகிற பிப்ரவரி மாதம் சர்வதேச யோகா போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்க மாணவ-மாணவிகள் தேர்வு செய்வற்கான யோகா போட்டிகள் கம்பத்தில் நடந்தது. இதில் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த 11 வயது முதல் 14 வயது வரை நின்ற நிலை பிரிவில் ரித்திக்சா, தன்யா, ஹாஷினி ஆகியோர் முதலிடமும், அமர்ந்த நிலை பிரிவில் ரூபியா, அகல்யா, தேவஸ்ரீ ஆகியோர் முதலிடமும், 8 முதல் 11 வயது பிரிவில் சர்வின், சந்தோஷ் ஆகியோர் முதலிடமும் பெற்றனர். 'பேலன்ஸ்' பிரிவில் 11 வயது முதல் 14 வயது வரை உள்ள பிரிவில் தருண், வர்ஷன், விபின் மற்றும் ஹரிஹர சுதன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் இலங்கையில் நடைபெறும் சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வாகினர்.
இந்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் எம்.எஸ்.காந்தவாசன், செயலர் சுகன்யா காந்தவாசன், பள்ளி முதல்வர் புவனேஸ்வரி, உதவி முதல்வர் லோகநாதன் மற்றும் யோகா ஆசிரியர்கள் துரை ராஜேந்திரன், ரவி ராம் ஆகியோர் பாராட்டி சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கினர்.