சிவகங்கை
தேசிய சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு
|தேசிய சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு இளையான்குடியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இளையான்குடி
தேசிய அளவிலான சிலம்ப போட்டிகள் இந்திய இளையோருக்கான விளையாட்டு கழகம் சார்பில் சென்னையில் நடைபெற்றது. இதில் தேசிய அளவிலான 70-80 கிலோ எடை பிரிவில் சிலம்பம் போட்டியில் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் வணிகவியல் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவி காயத்ரி ஹரணி முதலிடத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். வெற்றி பெற்ற மாணவிக்கு கல்லூரி ஆட்சி குழு செயலாளர் ரூ.1000 பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார். கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக செயலாண்மை துறை தலைவர் வேதிராஜன் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக மேலாண்மை துறை இணை பேராசிரியர் காமராஜ் ஆகியோர் வெற்றி சான்றிதழை வழங்கி பாராட்டினார்கள். மேலும் கல்லூரியில் படிக்கும் மாணவ- மாணவியர்கள் தங்கம் வென்ற மாணவி காயத்ரி ஹரணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.