< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
மாணவிக்கு பாராட்டு
|12 Oct 2023 12:15 AM IST
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்
கடையநல்லூர்:
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) உந்தும வளாகம் சார்பில் உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான "விண்வெளி தொழில்நுட்பத்தின் விளைவுகள், விண்வெளி துறையின் கண்டுபிடிப்புகள் பூமியில் உள்ள வாழ்க்கைக்கு எவ்வாறு பயனளிக்கின்றன" என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இதில் கடையநல்லூர் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி அப்னான் பாத்திமா மூன்றாம் பரிசு பெற்றார். பரிசு பெற்ற மாணவியை பள்ளி தாளாளர், முதல்வர், ஆட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.