< Back
மாநில செய்திகள்
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு

தினத்தந்தி
|
31 May 2023 11:13 PM IST

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

2022-23-ம் கல்வியாண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி முன்னிலை வகித்தார். விழாவில் கலெக்டர் கற்பகம் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 46 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், 11-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 3 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், 12-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 12 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் சால்வை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டினார். மேலும் அரசு பொதுத் தேர்வில் 10-ம் வகுப்பில் மாநிலத்தில் முதலிடமும், 12-ம் வகுப்பில் 3-வது இடமும் பெரம்பலூர் பிடித்து பெருமை சேர்த்தமைக்கு கல்வித்துறை அலுவலர்களுக்கும், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் கலெக்டர் தெரிவித்து கொண்டார். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குனர் கல்பனாத்ராய், மாவட்ட கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை, சுப்பிரமணியன், வேலு, உதவி திட்ட அலுவலர் ஜெய்சங்கர், நேர்முக உதவியாளர்கள் சுரேஷ், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்