< Back
மாநில செய்திகள்
அடிபட்டு காயங்களுடன் இருந்த மானை மீட்ட பொதுமக்களுக்கு பாராட்டு
அரியலூர்
மாநில செய்திகள்

அடிபட்டு காயங்களுடன் இருந்த மானை மீட்ட பொதுமக்களுக்கு பாராட்டு

தினத்தந்தி
|
8 March 2023 12:54 AM IST

அடிபட்டு காயங்களுடன் இருந்த மானை மீட்ட பொதுமக்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் ரெங்கசமுத்திரம் ஏரி அருகில் மான் ஒன்று முன்னங்காலில் அடிபட்டு காயமடைந்த நிலையில் இருந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் அந்த மானை மீட்டனர். இது குறித்து வனக்காப்பாளர் முத்துராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அவர், சரக்கு வாகனம் மூலம் அந்த மானை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அந்த மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மான், கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்