தென்காசி
அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு
|மாவட்ட பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவன் பாராட்டப்பட்டார்.
கடையநல்லூர்:
தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழ்நாடு விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டி தென்காசி ஐ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 50-க்கும் மேற்பட்ட பள்ளியில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் பரதன் பேச்சு போட்டியில் கலந்து கொண்டு 2-வது இடம் பிடித்தார். மாணவருக்கு தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரி ஷீலா ஜெயரூபி ரூ.7,000 ரொக்க பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியர் ராஜகோபால், முதுகலை வணிகவியல் ஆசிரியர் ராஜன், முதுகலை தமிழாசிரியர் சண்முகசுந்தரம், கணித ஆசிரியர் பாலச்சந்தர், பட்டதாரி அறிவியல் ஆசிரியர் திவான் மசூது, ஓவிய ஆசிரியர் முகைதீன் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.