< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
தங்கம் வென்ற மாற்றுத்திறனாளிக்கு பாராட்டு
|9 Aug 2023 11:26 PM IST
ஜெர்மனியில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருமயம் அருகே கோனாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் அழகப்பன். இவரது மகன் செல்வராஜ் (வயது 28). பட்டதாரியான இவர், உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிக்கான மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்ேகற்று பல பதக்கங்களை பெற்றுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு சர்வதேச அளவிலான உயரம் குறைந்தவர்களுக்கான ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்றார். இந்நிலையில், ஜெர்மனியில் சர்வதேச அளவிலான உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிக்கான தடகள போட்டியில் செல்வராஜ் கலந்து கொண்டார். இதில் ஜூனியர் பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்று சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அதனைத்தொடர்ந்து சொந்த ஊருக்கு வந்த செல்வராஜிக்கு திருமயம் பஸ்நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.