< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
ரெயில்வே தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிக்கு பாராட்டு
|22 July 2023 12:08 AM IST
ரெயில்வே தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் பகுதியை சேர்ந்தவர் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வடிவேல். இவர் கரூர் மாவட்ட மைய நூலக கேட்பொலி நூலக பிரிவில் படித்து, ரெயில்வே ஆர்.ஆர்.பி. குரூப்-டி தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் பெரம்பூர் லோகோ ஒர்க் ஷாப்பில் உதவியாளராக பணி நியமனம் பெற்றுள்ளார். இதையடுத்து வடிவேலுவை நேரில் அழைத்து கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் ஆகியோர் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினர். அப்போது சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சைபுதீன், மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.