< Back
மாநில செய்திகள்
கடலூர் போலீஸ் அணியினருக்கு பாராட்டு
கடலூர்
மாநில செய்திகள்

கடலூர் போலீஸ் அணியினருக்கு பாராட்டு

தினத்தந்தி
|
23 July 2023 12:15 AM IST

கபடி போட்டியில் சாதனை புரிந்த கடலூர் போலீஸ் அணியினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கடலூர்

அரசு ஊழியர்களுக்கான 'முதல்-அமைச்சர் கோப்பை- 2023', கபடி விளையாட்டு போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 17-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. இந்த போட்டியில் கடலூர் காவல்துறை சார்பில் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கலந்து கொண்டு விளையாடினர்.

இதில் கடலூர் போலீஸ் கபடி அணியினர் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்து, வெண்கல பதக்கம் மற்றும் ரூ.3 லட்சம் பரிசு பெற்றனர். இதையடுத்து முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் சாதனை படைத்து கடலூர் திரும்பிய போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அருட்செல்வன், பயிற்சியாளர் தனசேகரன், அணி மேலாளர் கோவர்த்தனன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்