< Back
மாநில செய்திகள்
தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

தினத்தந்தி
|
5 Oct 2023 12:15 AM IST

திட்டச்சேரி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

திட்டச்சேரி:

திட்டச்சேரி பேரூராட்சியில் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, குப்பை இல்லா இந்தியா என்ற இலக்கை அடைய 2 வாரம் தூய்மையே சேவை இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்க தூய்மை பணியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா பேரூராட்சி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா தலைமை தாங்கி தூய்மை பணியாளர்கள் 30 பேருக்கு சால்வை அணிவித்து பரிசு பொருட்களை வழங்கினார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். இதில் அலுவலக பணியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக உதவியாளர் மாதவன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்