< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு
|9 Sept 2023 12:14 AM IST
திருப்புல்லாணி அருகே விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
திருப்புல்லாணி யூனியன் தினைக்குளம் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் மணிமொழிக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. அதையொட்டி பள்ளி மற்றும் ஜமாத் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் டேவிட் மோசஸ், உதவி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், மணிவண்ணன், ஜமாத் செயலாளர் முகமது ரபிக், ஹாஜி கமால் பாட்சா குடும்பத்தினர், பள்ளி மேலாண்மைகுழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விருது பெற்ற ஆசிரியரை பாராட்டினர்.