பெரம்பலூர்
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற போலீசாருக்கு பாராட்டு
|முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட அளவில் அரசு ஊழியர்களுக்கான பிரிவில் மாவட்ட ஆயுதப்படை போலீசார், பெண் போலீசார் கலந்து கொண்டு விளையாடினர். இதில் தனிநபர், இரட்டையர், குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற போலீசாருக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கலெக்டர் கற்பகம் முன்னிலையில் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு பரிசு தொகையும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. வெற்றி பெற்ற போலீசார் மாநில அளவில் விளையாடவுள்ளனர். வெற்றி பெற்ற போலீசார் தங்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள், சான்றிதழ்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர் காவல் துறையில் முக்கியமான பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வந்து உடலையும், மனதையும் ஆரோக்கியத்துடன் வைக்க உதவும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.