< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
கபடி போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
|21 Oct 2022 12:02 AM IST
கபடி போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
தோகைமலை அருகே உள்ள செங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள மான அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டி பல்வேறு சுற்றுகளாக நடந்தது. இதில், முதல் பரிசை செங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணி பிடித்தது. இதையடுத்து அந்த அணிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இதையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் சக மாணவ-மாணவிகள் பாராட்டினர்.