< Back
மாநில செய்திகள்
கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்

தினத்தந்தி
|
21 Aug 2023 1:48 AM IST

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

வள்ளியூர்,

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. முதலாவது அணுஉலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

அதன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. பழுதை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுனர்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 2-வது அணுஉலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்