< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
|17 April 2023 11:34 PM IST
ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
ஆம்பூர் தாலுகா கீழ்கன்றாம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி முனீஸ்வரி (வயது 40). கர்ப்பிணியான இவர் பிரசவத்துக்காக வெங்கடசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆம்புலன்ஸை டிரைவர் சிதம்பரம் ஓட்டினார். ஊசூர் அருகே சென்றபோது அவருக்கு பிரசவ வலி அதிகரித்தது. உடனே ஆம்புலன்சை நிறித்தி மருத்துவ உதவியாளர் சார்லஸ் பிரசவம் பார்த்தார். முனீஸ்வரிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.