< Back
மாநில செய்திகள்
அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலில் கிரிவலம்
கரூர்
மாநில செய்திகள்

அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலில் கிரிவலம்

தினத்தந்தி
|
2 Aug 2023 12:06 AM IST

அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலில் கிரிவலம் நடைபெற்றது.

குளித்தலை அருகே உள்ள அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற ரெத்தினகிரீசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மலையை சுற்றி பொதுமக்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதுபோல ஆடி மாத பவுர்ணமியான நேற்று அய்யர்மலை மட்டுமல்லாது குளித்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கோவில் அடிவாரத்தில் உள்ள விநாயகர், வைரப்பெருமாள் சுவாமிகளை வணங்கினர். சில பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சாமியை தரிசனம் செய்தனர். இதன் பின்னர் 4 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இக்கோவில் மலையை சுற்றி கிரிவலம் சென்று சாமியை வழிபட்டனர். இந்த கோவில் மலையை சுற்றி உள்ள பல இடங்களில் சிலர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

மேலும் செய்திகள்