< Back
மாநில செய்திகள்
கிருத்திகை விழா: திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கிருத்திகை விழா: திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

தினத்தந்தி
|
20 Aug 2022 2:14 PM IST

கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று கிருத்திகை, முருகப்பெருமானுக்கு உகந்த தினம் என்பதால் அண்டை மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்