< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
கொசஸ்தலை ஆற்றில் பாயும் கிருஷ்ணாபுரம் அணை நீர்
|3 Nov 2022 4:25 PM IST
கொசஸ்தலை ஆற்றில் பாயும் கிருஷ்ணாபுரம் அணை நீரால் நீர்மட்டம் உயர்ந்தது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அம்மபள்ளி என்ற இடத்தில் கிருஷ்ணாபுரம் அணை உள்ளது. இந்த அணை உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநில நீர்ப்பாசன துறை அதிகாரிகள் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றினார்கள். இந்த தண்ணீர் கொசஸ்தலைஆற்றில் பாய்ந்தது. இதனால் இந்த பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. எனவே இந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.