< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம்
|16 July 2024 4:19 PM IST
கிருஷ்ணகுமாரை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை செய்ததையடுத்து இன்று அவர் நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டதை அடுத்து, சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங் ஆகிய இருவரும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டனர். இதையடுத்து காலியான சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி இடத்திற்கு கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.