< Back
மாநில செய்திகள்
காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆணவக்கொலை... உறவினர்கள் சாலை மறியல்
மாநில செய்திகள்

காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆணவக்கொலை... உறவினர்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
21 March 2023 4:16 PM IST

காதல் விவகாரத்தில் நடுரோட்டில் இளைஞர் துடிக்க துடிக்க ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே இளைஞர் ஒருவர், ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ள நிலையில், பெண்வீட்டாரின் எதிர்ப்பை மீறி அப்பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த இளைஞர் கே.ஆர்.பி. அணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பெண்ணின் உறவினர்கள் நடுரோட்டில் துடிக்க துடிக்க ஜெகனின் கழுத்தை அறுத்துபடுகொலை செய்துள்ளனர்.

இதையடுத்து அந்த கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதனிடையே நடுரோட்டில் படுகொலை செய்துள்ள குற்றவாளிகளை கைதுசெய்யக்கோரி உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றன்ர். இதன் காரணமாக கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மாவட்ட எஸ்.பி. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

காதல் விவகாரத்தில் நடுரோட்டில் இளைஞர் துடிக்க துடிக்க ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்