< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி விபத்து: மாவட்ட கலெக்டர், எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி விபத்து: மாவட்ட கலெக்டர், எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

தினத்தந்தி
|
1 Aug 2023 5:13 PM IST

விபத்து தொடர்பாக 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு கிடங்கில் கடந்த 29-ந்தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி வெடி விபத்து தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது.

இதனை தொடர்ந்து, வெடி விபத்து சம்பவம் தொடர்பாக 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்