< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
கிருஷ்ணகிரி: துக்க நிகழ்வுக்கு சென்ற சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 30 பேர் காயம்...!

6 July 2022 3:58 PM IST
கிருஷ்ணகிரி அருகே துக்க நிகழ்வுக்கு சென்ற சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்தனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அடுத்த நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் துக்க நிகழ்விற்கு செல்வதற்காக சரக்கு வேன் ஒன்றில் 40 பேர் சென்று உள்ளார்.
இந்த வேன் தீர்த்தகிரி வலசை அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இவர்களை அப்பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சரக்கு வேன் டிரைவர் மணி குடிபோதையில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகிவுள்ளது.