< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி: கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து - 2 பேர் பலி
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி: கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து - 2 பேர் பலி

தினத்தந்தி
|
16 Jun 2022 8:35 PM IST

கிருஷ்ணகிரியில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கார்வேபுரம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 35). இவரும் ஹரீஷ் (32) என்பவரும் காரில், இன்று தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி காரில் வந்த கொண்டிருந்தனர்.

அந்த கார் தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையில் கிருஷ்ணகிரி அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து கார் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற முரளி சம்பவ இடத்திலேயே பலியானார். ஹரீஷ் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே ஹரீசும் உயிர் இழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி அணை போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்