< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
விளாத்திகுளத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா
|8 Sept 2023 12:15 AM IST
விளாத்திகுளத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு பஸ் நிலையம் முன்பு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் சிலைக்கு தீபாரதனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்பு அங்கிருந்த கன்றுடன் கூடிய பசுவிற்கு கோ பூஜை நடந்தது. தொடர்ந்து கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்த குழந்தைகள் ஊர்வலம் நடந்தது. இதில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டது.
இதேபோல் எட்டயபுரம் பெரியதெப்பம் அருகே உள்ள கிருஷ்ணர் கோவிலில் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து வந்து தரிசனம் செய்தனர்